Tuesday, March 19, 2013

1 தமிழ் மணம்!


1 தமிழ் மணம் என்று அவர்களாகவே அவர்களுக்கு சர்டிபிகேட் கடுத்து கொள்வார்கள். இன்டிலிதான் தமிழ் வலை உலகின் நம்பர் 1 என்பது பதிபவர்களுக்கு தெரியும் என்பது வேறு விடயம்.

விஸ்வரூபம் நமத்து போன பக்கொடாவான பின்னாலும், மதவெறி தாளாமல் ஒருவர் இப்படி ஒரு தலைப்பை வைத்து பதிவை சமர்பித்துள்ளார். இதுபோன்ற அதிமேதாவிகள், கொள்கை கோமான்களைதான் தமிழ் மணம் விரும்பும். 

நடுநிலையா எழுதும் பதிபவர்களை தடை செய்யும். சிலரை காப்பி பேஸ்ட் என்று விமர்சனம் செய்யும், பிற மதத்தை தாக்கி எழுதும் பதிவுகளை பதிய கூடாது என்று சொல்லும். ஆனால் தமிழ் மணத்தில் நடப்பது மதச்சண்டை, குடுமி சண்டை இதை வைத்துதான் கேவலமான பதிவு அரசியல் நடத்தி இணையம் வளர்க்கிறது தமிழ் மணம்.

சரி வாசகர்களே இப்பொழுது அந்த பதிவுக்கு வருவோம்.

 விஸ்வரூப தீர்ப்புக்கும் அப்பால்! 

என்கிற தலைப்பில் தமிழ் மணத்தில்  வெளியான பதிவை கிளிக் செய்து பார்த்தால் அடப்பாவமே அங்கே ஒன்றுமே இல்லை. தலைப்பு மட்டும்தான் இருக்கு பதிவு எதுவுமே இல்லை.

/////////அந்த பதிவுக்கு வந்திருக்கும் கருத்துக்களை படியுங்கள்////////

1.தமிழ் மணத்தின்வேகநரி said...

பதிவையே காணவில்லை.இஸ்லாமியர்கள் தடைவிதித்து விட்டார்களா?

சார்வாகன் said...
சகோ இராசநட,

அருமையான சிந்திக்க வைக்கும் பதிவு. இதில் உங்களின் வெள்ளை மனம் தெரிகிறது. எத்த‌னை பதிவு,எதைப் பற்றி எழுதினாலும் இதுதான் மிச்சம் என வாழ்வின் தத்துவத்தை புரியவைத்த மாமேதையே போற்றுகிறேன்.

சந்தடி சாக்கில் வவ்வால் தன் கணிப்பு சரி,இறைத் தூதர் என தனது வவ்வால் மதத்தை பிரச்சாரம் செய்யப் பார்க்கிறார்.

உங்களின் வெற்றிட மதம் அத்னை விட உயர்ந்தது என்பதும் வெற்று பதிவு இடாமல் கண்டதையும் வெட்டி ஒட்டு பதிவிடுபவர்கள் உங்கள் மனதை புண் படுத்துவதால் ஒரு போராட்டம் நடத்துவோம்!!

வெற்றிடம் தேடி வேறு இடம் செல்லாதே
வெறி கொண்டு மனிதத்தை வேட்டையாடாதே!!

எப்புடீ!!

நன்றி!!

 காட்டான் said...
தடை செய்ய சொன்னவங்களே கள்ள Cd விக்க தொடங்கீட்டாங்க அப்போ தங்கள் வியாபாரம் நல்லா போகனும்ன்னுதான் தடை கேட்டாங்களா..? காசுன்னா தங்கள் மதத்தையும் விற்பாங்கபோல?

Saturday, January 26, 2013

அழிக ஜனநாயகம்! வாழ்க மதவாதம்! தமிழ் மணத்தின் உறுதி மொழி!

கட்டண சேவை என்கிற பெயரில் தமிழ் மணத்தின் தலையில் உட்கார்ந்து இருக்கும் http://www.puradsifm.com/viswaroopam/ புரட்சி எப்.எம் யின் இன்றைய கேவலமான மதவாத பதிவு,

விஸ்பரூபத்தில் விபரீதம் என்ன தான் இருக்கு? இதுதான் பதிவின் தலைப்பு. அடுத்தவர் துன்பப்படுவதை தம் மதத்தின் பெயரலால் நியாயப்படுத்துகிறாரோ அவர் புனிதரே அல்ல! புழுத்துப் போன செத்த பன்னிக்கு ஒப்பானவர்!  இனிமே எவனுமே வாய் தொறக்க கூடாது! காரணம், நாளை உங்களின் வாயில் இருந்தும் தீவிரவாதத்திற்கு எதிரான சொற் பிரயோகங்கள் வரலாம்!  அப்படி வந்தால், அடுத்த நிமிடம் உங்கள் வீட்டின் முன்பும் செம்மறிக் கூட்டங்கள்.

இதுவெல்லாம் முஸ்லிம்களை நோக்கி சொல்லப்படுபவை. செம்மறியாட்டு கூட்டம், புழுத்து போன பன்னி.  

அடுத்து நாட்டுக்கு தேவையான பெரிய ஒரு சமூக சிந்தனை படைத்த உறுதி மொழி வேறு எடுக்கிறார் நமது தமிழ் நாத்தத்தின் சாரி மணத்தின் தலையில் இருக்கும் புரட்சி  எப்.எம். அழிக ஜனநாயகம்! வாழ்க மதவாதம்! ஓங்குக மதத்தின் பெயரால் இடம் பெறும் வன் முறைகள்! ஒரு சமூக சிந்தனை இல்லாத வெறிபிடித்த, வக்கிரம் பிடித்த பதிபவர்கள் நிறைந்த ஒரு திரட்டிதான் தமிழ் நாத்தாம் சாரி! சாரி! தமிழ் மணம்.

தமிழ் நாத்தத்தில் இருந்து எல்லோரும் தமிழில் மணம் பரப்பும் சிறந்த திரட்டிகளான இன்டிலி, தமிழ் 10, தமிழ்வெளி, வலைபூக்கள், தேன்கூடு, உடான்ஸ், உழவன், தமிழன் திரட்டி போன்ற திரட்டிகளுக்கு மாறுவோம் அவர்களை ஆதரிப்போம். இந்த வக்கிரம் பிடித்த கூட்டம் மட்டும் அங்கே தனியக கிடந்தது ஒருவரை ஒருவர் தூற்றி கொண்டிருக்கட்டும். 

Thursday, January 24, 2013

தமிழ் மணத்தில் இன்றைய ஸ்பெஷல் தோசை!

தமிழில் மணம் பரப்புகிறோம் என்று சொல்லி நாத்தம் பரப்புகின்றனர். தமிழ் மக்களிடம் குரோதத்தை உண்டாக்குகின்றனர்.  மதவாத பதிவுகளுக்கு இடமில்லை, காப்பி பேஸ்ட் பதிவுக்கு இடமில்லை என்று சொல்வார்கள். 

ஆனால் இவர்களே பல மதவாத பதிவுகள் எழுதுபவர்களை ஆதரிப்பார்கள். பதிபவர்களை இரண்டு கூராக்கி ஒருவருக்கொருவர் மாற்றி கருத்துக்களை எழுதவைப்பார்கள். இவர்களே ஒரு குறிப்பிட்ட பதிபவர்களின் பதிவுகளை முன்னணிக்கு கொண்டு வருவார்கள். 

திரட்டி நடத்தினால் மற்ற திரட்டிகள் மாதிரி கருத்து சுதந்திரம் கொடுக்க வேண்டும். வெளிப்படையாக தாக்கி எழுதாமல் மறைமுகமாக ஒருத்தரை ஒருத்தர் தாக்கி எழுதும் பதிபவர்கள் கூட்டம் நிறைந்த சாக்கடைதான் தமிழ் மணம்.

தமிழ் மணத்தின் இன்றைய ஸ்பெசல் தோசை கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம். இதை ஆதரித்து ஒரு கூட்டம் எதிர்த்து ஒரு கூட்டம் இவர்கள் அடித்து கொண்டு நாறும் நாற்றம் கணணியை தாண்டி மூக்கு வரைக்கும் வருகிறது. இன்றைய தமிழ் மணத்தின் முகப்பு பகுதி, முன்னணி இடுகை எல்லாமே விஸ்வரூபம். 

அது சரி மக்கள் பிரச்சனைகள், அதாவது தமிழக மீனவர்கள் படுகொலை, கூடங்குளம், காவேரி நதிநீர், தலித் மக்கள் மீதான வன்கொடுமை, டெல்டா விவசாயிகள் தற்கொலை இதை பற்றிய பதிவுகளுக்கு முக்கியத்துவம் இல்லை. தமிழ் மணம் திரட்டியினர். நல்லா வியாபாரம் பண்ணுறாங்க ஐயா! தமிழ் வாசகர்களும் தமிழ் மக்களும், பதிபவர்களும் தமிழ் மணம் திரட்டியை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்.