Sunday, September 30, 2012

சமூக பொறுப்பற்ற தமிழ்மணம்!

திரட்டிகளில் பெரும்பான்மையானவைகள் கூடங்குளம் விடயத்தை முக்கியத்துவம் கொடுத்து வந்தன. ஆனால் தமிழில் மணம் பரப்புகிறோம் என்கிற போர்வையில் செயல்படும் இணையதளம் மக்கள் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

பதிவர்களை கூடி கும்மி அடிக்க வைக்கவும், ஒருவரை பற்றி ஒருவரை தரக்குறைவாக எழுத வைப்பது மூலம் பகைமையை வளர்த்து, அவர்களும் இவர்களுக்கு பதில் போடுகிறோம் பேர்வழிகள் என்று எண்ண வைக்கிறது. இன்று தமிழ் மணத்தில் என்ன நடக்கிறது? என்று பேச வைத்தார்கள். இதுதான் அவர்களின் இழிவான வியாபார யுக்தி.

இதை பற்றி அறியாத பதிபவர்கள் அதில் ஒருவரை பற்றி மற்றொருவர் இழிவாகவும், மதங்களை பற்றி இழிவாகவும் எழுதி பதிவுகளை வெளியிடுகின்றனர். இப்படி சமூக பொறுப்பில்லாத ஒரு திரட்டியை விட்டு பதிபவர்கள் வெளியேற வேண்டும், புறக்கணிக்க வேண்டும். மற்ற திட்டிகளை ஊக்குவிக்க வேண்டும். அப்பொழுது ஆவது இவர்கள் உணர்வார்களா பாப்போம்.

1 comment:

கவிதை வானம் said...

தேவையான ஒரு பதிவு ...